கை கழுவுவதின் அபார சக்தி
-
0:00 - 0:06ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது
-
0:06 - 0:09அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் !
-
0:09 - 0:12தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா?
-
0:12 - 0:14இப்பொழுது நினைத்துப் பாருங்கள்
-
0:14 - 0:1860 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள்
-
0:18 - 0:21தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன
-
0:21 - 0:23அவ்வளவு குழந்தைகள்
-
0:23 - 0:255ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
-
0:25 - 0:2966 லட்சம் குழந்தைகள்
-
0:29 - 0:325 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
-
0:32 - 0:35மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும்
-
0:35 - 0:37இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை
-
0:37 - 0:38கோபத்தில் கொதிக்க வைக்கிறது
-
0:38 - 0:41என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது
-
0:41 - 0:43பேதியும் நிமோனியாவும்
-
0:43 - 0:44அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள்
-
0:44 - 0:475 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை.
-
0:47 - 0:49இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம்
-
0:49 - 0:51சாதுரியமான, நவீனத்
-
0:51 - 0:54தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை
-
0:54 - 0:59உலகத்தின் மிகப் பழமையான உத்தி
-
0:59 - 1:02ஒரு சோப்புக் கட்டி
-
1:02 - 1:04சோப்பினால் கைகளைக் கழுவுவது
-
1:04 - 1:06நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம்
-
1:06 - 1:08பேதியைப் பாதியாக குறைக்க முடியும்
-
1:08 - 1:12சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை
-
1:12 - 1:14சோப்பினால் கை கழுவுவதின்
-
1:14 - 1:16தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும்
-
1:16 - 1:21ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை
-
1:21 - 1:23அண்மை நிகழ்வின்படி காலராவை
-
1:23 - 1:26ஈபோலா பரவுவதை தடுக்கும்
-
1:26 - 1:27மிக முக்கியமான தடுப்பு முறை
-
1:27 - 1:30சோப்பால் கை கழுவுவது
-
1:30 - 1:33பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது
-
1:33 - 1:36சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது
-
1:36 - 1:38சோப்பால் கை கழுவுவது
-
1:38 - 1:41குறைந்த செலவில் அதிக சக்தியான
-
1:41 - 1:43குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி
-
1:43 - 1:47ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும்.
-
1:47 - 1:50இது எதற்கு சமமானது?
-
1:50 - 1:52பத்து ஜம்போ ஜெட் விமானங்கள்
-
1:52 - 1:54நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து
-
1:54 - 1:57நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம்
-
1:57 - 1:59என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள்
-
1:59 - 2:02மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று
-
2:02 - 2:05ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்
-
2:05 - 2:07அண்டை நபரைத் தெரிந்து கொள்ள
-
2:11 - 2:13அவரிடம் கை குலுக்குங்கள்
-
2:16 - 2:18நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர்
-
2:21 - 2:23தங்கள் கைகளைக் கழுவவில்லை
-
2:23 - 2:25கழிவறையிலிருந்து வந்த போது
-
2:25 - 2:29என்று சொன்னால் எப்படி?
-
2:29 - 2:32அசிங்கம் .........
-
2:32 - 2:34புள்ளி விவரத்தின் படி
-
2:34 - 2:36ஐந்தில் நான்கு பேர்
-
2:36 - 2:39கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை
-
2:39 - 2:40உலகம் முழுவதும்.
-
2:40 - 2:42நாமும் செய்வதில்லை
-
2:42 - 2:45ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர்
-
2:45 - 2:48சோப் எல்லாம் இருந்தும்
-
2:48 - 2:50குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில்
-
2:50 - 2:53இது ஏன்?
-
2:53 - 2:55அங்கு சோப்பு இல்லையா?
-
2:55 - 2:58உண்மையில் சோப் இருக்கிறது
-
2:58 - 3:01இந்தியாவில் 90 % வீடுகளில்
-
3:01 - 3:04கென்யாவில் 94 % வீடுகளில்
-
3:04 - 3:05நீங்கள் சோப்பைக் காணலாம்
-
3:05 - 3:09சோப் மிகவும் குறைவான
-
3:09 - 3:13எதியோப்பியாவில் கூட 50 %
-
3:13 - 3:14இது ஏன் ?
-
3:14 - 3:17மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை
-
3:17 - 3:19சிறுவன் மாயாங்க்
-
3:19 - 3:22இந்தியாவில் நான் சந்தித்தவன்
-
3:22 - 3:23ஏன் அதைச் செய்வதில்லை?
-
3:23 - 3:26மாயாங்கின் குடும்பத்தில்
-
3:26 - 3:28குளிப்பதற்கு சோப்
-
3:28 - 3:30துணி தோய்ப்பதற்கு சோப்
-
3:30 - 3:32பாத்திரம் கழுவுவதற்கு சோப்
-
3:32 - 3:33அவன் பெற்றோர்கள்
-
3:33 - 3:35சோப் அதிக விலையென்று
-
3:35 - 3:37அதை வீணாக்காமல் இருக்க
-
3:37 - 3:39அலமாரியில் வைக்கிறார்கள்
-
3:39 - 3:42அவன் கைகளுக்கெட்டாமல்
-
3:42 - 3:44சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில்
-
3:44 - 3:46கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை
-
3:46 - 3:48பயன்படுத்துகிறார்கள்
-
3:50 - 3:53சில சமயம் வாரத்திற்கொரு முறை
-
3:53 - 3:55இதன் விளைவு என்ன?
-
3:55 - 3:57குழந்தைகளுக்கு வியாதி
-
3:57 - 3:59மிக பாதுகாப்பாக கருதப்படும்
-
3:59 - 4:04அவர்களின் வீடுகளில்
-
4:04 - 4:06சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்?
-
4:06 - 4:09உங்கள் வீட்டிலா?
-
4:09 - 4:12அல்லது உங்கள் பள்ளியிலா?
-
4:12 - 4:14நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
-
4:14 - 4:17பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று
-
4:17 - 4:22வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை
-
4:22 - 4:25ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம்
-
4:25 - 4:27ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள்
-
4:27 - 4:31நம் நடத்தைகளை மாற்ற வல்லவை
-
4:31 - 4:33இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது
-
4:33 - 4:37ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில்
-
4:37 - 4:40111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள்
-
4:40 - 4:44தங்கள் குடும்பத்தைக் காக்க.
-
4:44 - 4:46இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள்
-
4:46 - 4:48சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது
-
4:48 - 4:52லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று.
-
4:52 - 4:54இது போல பிரபலமான ப்ராண்டுகள்
-
4:54 - 4:56நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன
-
4:56 - 4:58தங்கள் பொருள்களை விற்குமிடத்தில்.
-
4:58 - 5:01அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால்
-
5:01 - 5:04கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி
-
5:04 - 5:08தாய்மார்களிடம் பேச இயலுகிறது
-
5:08 - 5:11பெரிய வர்த்தக நிறுவனங்கள்
-
5:11 - 5:13சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும்
-
5:13 - 5:15வேர்விட்ட பழக்கங்களை
-
5:15 - 5:17மாற்ற முடியும்
-
5:17 - 5:18எண்ணிப்பாருங்கள்
-
5:18 - 5:22விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும்
-
5:22 - 5:26பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள்
-
5:26 - 5:29அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய
-
5:29 - 5:32விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற.
-
5:32 - 5:34எண்ணிப்பாருங்கள்
-
5:34 - 5:35அவர்கள் சக்தி முழுவதையும்
-
5:35 - 5:37கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள
-
5:37 - 5:40செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும?
-
5:40 - 5:43இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு
-
5:43 - 5:45ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
-
5:45 - 5:46இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது
-
5:46 - 5:50லைபாய் பிராண்டு சோப் 1894ல்
-
5:50 - 5:52இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது
-
5:52 - 5:54காலராவுடன் போராடுவதற்காக
-
5:54 - 5:56போனவாரம் கானாவில் இருந்தேன்
-
5:56 - 5:58சுகாதார மந்திரியுடன்
-
5:58 - 5:59கானாவில் இப்பொழுது
-
5:59 - 6:02காலரா பரவியுள்ளது
-
6:02 - 6:04118 வருடங்களுக்குப் பிறகும்
-
6:04 - 6:06தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது
-
6:06 - 6:08அவர்களுக்கு
-
6:08 - 6:10இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே
-
6:10 - 6:11அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே
-
6:11 - 6:13அதுவே சிறந்த வழி
-
6:13 - 6:17காலரா பரவுவதைத் தடுக்க
-
6:17 - 6:19நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம்
-
6:19 - 6:21மிகவும் சக்தி வாய்ந்தது
-
6:21 - 6:22சில சமயங்களில் அதிக சக்தியுடையது
-
6:22 - 6:26அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட
-
6:26 - 6:27அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது
-
6:27 - 6:31முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க
-
6:31 - 6:33மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க
-
6:33 - 6:35காலராவை, தற்பொழுது ஈபோலாவை
-
6:35 - 6:37பல முக்கிய விஷயங்கள் இருப்பதால்
-
6:37 - 6:40நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை
-
6:40 - 6:42இதை எண்ணிப் பார்த்தால்
-
6:42 - 6:44என்ன தேவையென்று சிந்தித்தால்
-
6:44 - 6:46கைகழுவுவதை தினப் பழக்கமாக்க
-
6:46 - 6:50தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது
-
6:50 - 6:53இந்த நடத்தையை மேம்படுத்த.
-
6:53 - 6:58சுருக்கமாகச் சொன்னால் ,
-
6:58 - 7:00சோப் நிறுவனங்களின் உதவி தேவை
-
7:00 - 7:03சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க
-
7:03 - 7:05நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்
-
7:05 - 7:08யூ எஸ் எய்ட்ஸ் ,
-
7:08 - 7:10உலக பொது + தனியார் துறை கூட்டு
-
7:10 - 7:12லண்டன் சுகாதாரப் பள்ளி
-
7:12 - 7:14ப்ளான் வாடர் எய்ட்
-
7:14 - 7:15அனைவரும் நம்புகிறோம்
-
7:15 - 7:19வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை
-
7:19 - 7:21பொதுத் துறைக்கு வெற்றி
-
7:21 - 7:24அவர்கள் இலக்கை அடைய முடிவதால்
-
7:24 - 7:26தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும்
-
7:26 - 7:28புது தலைமுறையை உருவாக்குவதால்
-
7:29 - 7:32மிக முக்கியமாக
-
7:32 - 7:34பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி
-
7:34 - 7:36அக்டோபர் 15ம் தேதியன்று
-
7:36 - 7:39உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம்
-
7:39 - 7:40பள்ளிகள்,சமூகம்
-
7:40 - 7:42பொது சுகாதாரத் துறை நண்பர்கள்
-
7:42 - 7:45தனியார் துறை நண்பர்கள் .
-
7:45 - 7:47நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள்
-
7:47 - 7:49கை கழுவும் தினத்தைக் கொண்டாட
-
7:49 - 7:51உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை
-
7:51 - 7:53இங்கு என்ன தேவை
-
7:53 - 7:54இங்கு தனியார் துறை
-
7:54 - 7:57பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம்
-
7:57 - 8:01மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால்
-
8:01 - 8:03இந்தச் செய்தியை பரப்புவதற்கு
-
8:03 - 8:06குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு
-
8:06 - 8:09சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம்
-
8:09 - 8:11சோப்பால் கை கழுவும் செய்தியை
-
8:11 - 8:13மக்களிடம் பரப்புவதற்காக
-
8:13 - 8:15அவர்களுக்கு புரியும் வகையில்
-
8:15 - 8:1730 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள்
-
8:17 - 8:19விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன
-
8:19 - 8:215 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு
-
8:21 - 8:25அவைகளைப் பாருங்கள்
-
8:25 - 8:26நான் மாலியிலிருந்து வருகிறேன்
-
8:26 - 8:29மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று
-
8:29 - 8:32நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும்
-
8:32 - 8:34சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம்.
-
8:34 - 8:37நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில்
-
8:37 - 8:39பிரபல பொது சுகாதாரப் பள்ளியில்
-
8:39 - 8:42ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற
-
8:42 - 8:44என் நாட்டின் ஒரே பெண்மணி நான்
-
8:44 - 8:48சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம்
-
8:48 - 8:49பெற்ற ஒரே பெண்மணி
-
8:49 - 8:53கை தட்டல்
-
8:56 - 8:589 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன்
-
8:58 - 9:01பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன்
-
9:01 - 9:05பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை
-
9:05 - 9:08விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த
-
9:08 - 9:10அது தான் சோப்
-
9:10 - 9:12இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய
-
9:12 - 9:14சோப்பினால் கைகழுவும் திட்டத்தை
-
9:14 - 9:16எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும்
-
9:16 - 9:20183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம்
-
9:20 - 9:2316 நாடுகளில்
-
9:23 - 9:25எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம்
-
9:25 - 9:292020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப
-
9:29 - 9:31கடந்த நான்கு ஆண்டுகளில்
-
9:31 - 9:33வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது
-
9:33 - 9:35குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப்
-
9:35 - 9:40அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும்
-
9:40 - 9:42சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம்
-
9:42 - 9:44வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும்
-
9:44 - 9:48எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை.
-
9:48 - 9:50ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான்
-
9:50 - 9:52எங்களின் சேவை பெருகுகிறது
-
9:52 - 9:55அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல்
-
9:55 - 9:59எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது
-
9:59 - 10:01சென்ற வாரத்தில் நானும் என் குழுவும்
-
10:01 - 10:04பல தாய்மார்களைச் சந்தித்தோம் .
-
10:04 - 10:07அவர்கள் அனைவரும்
-
10:07 - 10:09குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள்
-
10:09 - 10:12நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது
-
10:12 - 10:15இதை விட பெரிய துக்கத்தை, வலியை
-
10:15 - 10:18இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள்
-
10:18 - 10:20மிக அழகான புன்னகை இவளுக்கு
-
10:20 - 10:22இந்தப் புன்னகை வந்தது ஏன்?
-
10:22 - 10:24வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால்
-
10:24 - 10:28இவள் மகன் மியோ இரண்டாமவன்
-
10:28 - 10:30அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள்
-
10:30 - 10:32மரணமடைந்தாள் மூன்று வாரத்தில்
-
10:32 - 10:34எங்களுக்குத் தெரியும் மரணமடையும்
-
10:34 - 10:36பெரும்பான்மையான குழந்தைகள்
-
10:36 - 10:38பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள்.
-
10:38 - 10:41நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால்
-
10:41 - 10:43பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும்
-
10:43 - 10:45குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை
-
10:45 - 10:47பயன்படுத்தினால் , நாம்
-
10:47 - 10:49சிசு மரணங்களை குறைக்கலாம்
-
10:49 - 10:51அது தான் என்ன ஊக்குவிக்கிறது
-
10:51 - 10:53இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர
-
10:53 - 10:55என்னால் அவளுக்கு உதவ முடியும்
-
10:55 - 10:57அவளுக்கு தேவையானதைக் கொடுத்து.
-
10:57 - 10:59அதனால் அவள் செய்யமுடியும்
-
10:59 - 11:01உலகத்திலேயே மகத்தான பணியை
-
11:01 - 11:03பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை
-
11:03 - 11:05அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது
-
11:05 - 11:07ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும்
-
11:07 - 11:10சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள்
-
11:10 - 11:13பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு
-
11:13 - 11:16எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன்
-
11:16 - 11:19சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க.
-
11:19 - 11:20மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக
-
11:20 - 11:23அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ.
-
11:23 - 11:24நன்றி
- Title:
- கை கழுவுவதின் அபார சக்தி
- Speaker:
- மிரியம் சிட்பே
- Description:
-
மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.
- Video Language:
- English
- Team:
- closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 11:41
Tharique Azeez approved Tamil subtitles for The simple power of handwashing | ||
Tharique Azeez edited Tamil subtitles for The simple power of handwashing | ||
Tharique Azeez edited Tamil subtitles for The simple power of handwashing | ||
Tharique Azeez edited Tamil subtitles for The simple power of handwashing | ||
Tharique Azeez accepted Tamil subtitles for The simple power of handwashing | ||
Rajagopal v edited Tamil subtitles for The simple power of handwashing | ||
Rajagopal v edited Tamil subtitles for The simple power of handwashing | ||
Rajagopal v edited Tamil subtitles for The simple power of handwashing |