Return to Video

கை கழுவுவதின் அபார சக்தி

  • 0:00 - 0:06
    ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது
  • 0:06 - 0:09
    அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் !
  • 0:09 - 0:12
    தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா?
  • 0:12 - 0:14
    இப்பொழுது நினைத்துப் பாருங்கள்
  • 0:14 - 0:18
    60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள்
  • 0:18 - 0:21
    தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன
  • 0:21 - 0:23
    அவ்வளவு குழந்தைகள்
  • 0:23 - 0:25
    5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
  • 0:25 - 0:29
    66 லட்சம் குழந்தைகள்
  • 0:29 - 0:32
    5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை
  • 0:32 - 0:35
    மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும்
  • 0:35 - 0:37
    இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை
  • 0:37 - 0:38
    கோபத்தில் கொதிக்க வைக்கிறது
  • 0:38 - 0:41
    என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது
  • 0:41 - 0:43
    பேதியும் நிமோனியாவும்
  • 0:43 - 0:44
    அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள்
  • 0:44 - 0:47
    5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை.
  • 0:47 - 0:49
    இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம்
  • 0:49 - 0:51
    சாதுரியமான, நவீனத்
  • 0:51 - 0:54
    தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை
  • 0:54 - 0:59
    உலகத்தின் மிகப் பழமையான உத்தி
  • 0:59 - 1:02
    ஒரு சோப்புக் கட்டி
  • 1:02 - 1:04
    சோப்பினால் கைகளைக் கழுவுவது
  • 1:04 - 1:06
    நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம்
  • 1:06 - 1:08
    பேதியைப் பாதியாக குறைக்க முடியும்
  • 1:08 - 1:12
    சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை
  • 1:12 - 1:14
    சோப்பினால் கை கழுவுவதின்
  • 1:14 - 1:16
    தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும்
  • 1:16 - 1:21
    ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை
  • 1:21 - 1:23
    அண்மை நிகழ்வின்படி காலராவை
  • 1:23 - 1:26
    ஈபோலா பரவுவதை தடுக்கும்
  • 1:26 - 1:27
    மிக முக்கியமான தடுப்பு முறை
  • 1:27 - 1:30
    சோப்பால் கை கழுவுவது
  • 1:30 - 1:33
    பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது
  • 1:33 - 1:36
    சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது
  • 1:36 - 1:38
    சோப்பால் கை கழுவுவது
  • 1:38 - 1:41
    குறைந்த செலவில் அதிக சக்தியான
  • 1:41 - 1:43
    குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி
  • 1:43 - 1:47
    ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும்.
  • 1:47 - 1:50
    இது எதற்கு சமமானது?
  • 1:50 - 1:52
    பத்து ஜம்போ ஜெட் விமானங்கள்
  • 1:52 - 1:54
    நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து
  • 1:54 - 1:57
    நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம்
  • 1:57 - 1:59
    என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள்
  • 1:59 - 2:02
    மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று
  • 2:02 - 2:05
    ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • 2:05 - 2:07
    அண்டை நபரைத் தெரிந்து கொள்ள
  • 2:11 - 2:13
    அவரிடம் கை குலுக்குங்கள்
  • 2:16 - 2:18
    நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர்
  • 2:21 - 2:23
    தங்கள் கைகளைக் கழுவவில்லை
  • 2:23 - 2:25
    கழிவறையிலிருந்து வந்த போது
  • 2:25 - 2:29
    என்று சொன்னால் எப்படி?
  • 2:29 - 2:32
    அசிங்கம் .........
  • 2:32 - 2:34
    புள்ளி விவரத்தின் படி
  • 2:34 - 2:36
    ஐந்தில் நான்கு பேர்
  • 2:36 - 2:39
    கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை
  • 2:39 - 2:40
    உலகம் முழுவதும்.
  • 2:40 - 2:42
    நாமும் செய்வதில்லை
  • 2:42 - 2:45
    ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர்
  • 2:45 - 2:48
    சோப் எல்லாம் இருந்தும்
  • 2:48 - 2:50
    குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில்
  • 2:50 - 2:53
    இது ஏன்?
  • 2:53 - 2:55
    அங்கு சோப்பு இல்லையா?
  • 2:55 - 2:58
    உண்மையில் சோப் இருக்கிறது
  • 2:58 - 3:01
    இந்தியாவில் 90 % வீடுகளில்
  • 3:01 - 3:04
    கென்யாவில் 94 % வீடுகளில்
  • 3:04 - 3:05
    நீங்கள் சோப்பைக் காணலாம்
  • 3:05 - 3:09
    சோப் மிகவும் குறைவான
  • 3:09 - 3:13
    எதியோப்பியாவில் கூட 50 %
  • 3:13 - 3:14
    இது ஏன் ?
  • 3:14 - 3:17
    மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை
  • 3:17 - 3:19
    சிறுவன் மாயாங்க்
  • 3:19 - 3:22
    இந்தியாவில் நான் சந்தித்தவன்
  • 3:22 - 3:23
    ஏன் அதைச் செய்வதில்லை?
  • 3:23 - 3:26
    மாயாங்கின் குடும்பத்தில்
  • 3:26 - 3:28
    குளிப்பதற்கு சோப்
  • 3:28 - 3:30
    துணி தோய்ப்பதற்கு சோப்
  • 3:30 - 3:32
    பாத்திரம் கழுவுவதற்கு சோப்
  • 3:32 - 3:33
    அவன் பெற்றோர்கள்
  • 3:33 - 3:35
    சோப் அதிக விலையென்று
  • 3:35 - 3:37
    அதை வீணாக்காமல் இருக்க
  • 3:37 - 3:39
    அலமாரியில் வைக்கிறார்கள்
  • 3:39 - 3:42
    அவன் கைகளுக்கெட்டாமல்
  • 3:42 - 3:44
    சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில்
  • 3:44 - 3:46
    கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை
  • 3:46 - 3:48
    பயன்படுத்துகிறார்கள்
  • 3:50 - 3:53
    சில சமயம் வாரத்திற்கொரு முறை
  • 3:53 - 3:55
    இதன் விளைவு என்ன?
  • 3:55 - 3:57
    குழந்தைகளுக்கு வியாதி
  • 3:57 - 3:59
    மிக பாதுகாப்பாக கருதப்படும்
  • 3:59 - 4:04
    அவர்களின் வீடுகளில்
  • 4:04 - 4:06
    சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்?
  • 4:06 - 4:09
    உங்கள் வீட்டிலா?
  • 4:09 - 4:12
    அல்லது உங்கள் பள்ளியிலா?
  • 4:12 - 4:14
    நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
  • 4:14 - 4:17
    பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று
  • 4:17 - 4:22
    வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை
  • 4:22 - 4:25
    ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம்
  • 4:25 - 4:27
    ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள்
  • 4:27 - 4:31
    நம் நடத்தைகளை மாற்ற வல்லவை
  • 4:31 - 4:33
    இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது
  • 4:33 - 4:37
    ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில்
  • 4:37 - 4:40
    111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள்
  • 4:40 - 4:44
    தங்கள் குடும்பத்தைக் காக்க.
  • 4:44 - 4:46
    இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள்
  • 4:46 - 4:48
    சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது
  • 4:48 - 4:52
    லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று.
  • 4:52 - 4:54
    இது போல பிரபலமான ப்ராண்டுகள்
  • 4:54 - 4:56
    நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன
  • 4:56 - 4:58
    தங்கள் பொருள்களை விற்குமிடத்தில்.
  • 4:58 - 5:01
    அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால்
  • 5:01 - 5:04
    கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி
  • 5:04 - 5:08
    தாய்மார்களிடம் பேச இயலுகிறது
  • 5:08 - 5:11
    பெரிய வர்த்தக நிறுவனங்கள்
  • 5:11 - 5:13
    சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும்
  • 5:13 - 5:15
    வேர்விட்ட பழக்கங்களை
  • 5:15 - 5:17
    மாற்ற முடியும்
  • 5:17 - 5:18
    எண்ணிப்பாருங்கள்
  • 5:18 - 5:22
    விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும்
  • 5:22 - 5:26
    பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள்
  • 5:26 - 5:29
    அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய
  • 5:29 - 5:32
    விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற.
  • 5:32 - 5:34
    எண்ணிப்பாருங்கள்
  • 5:34 - 5:35
    அவர்கள் சக்தி முழுவதையும்
  • 5:35 - 5:37
    கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள
  • 5:37 - 5:40
    செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும?
  • 5:40 - 5:43
    இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு
  • 5:43 - 5:45
    ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • 5:45 - 5:46
    இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது
  • 5:46 - 5:50
    லைபாய் பிராண்டு சோப் 1894ல்
  • 5:50 - 5:52
    இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது
  • 5:52 - 5:54
    காலராவுடன் போராடுவதற்காக
  • 5:54 - 5:56
    போனவாரம் கானாவில் இருந்தேன்
  • 5:56 - 5:58
    சுகாதார மந்திரியுடன்
  • 5:58 - 5:59
    கானாவில் இப்பொழுது
  • 5:59 - 6:02
    காலரா பரவியுள்ளது
  • 6:02 - 6:04
    118 வருடங்களுக்குப் பிறகும்
  • 6:04 - 6:06
    தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது
  • 6:06 - 6:08
    அவர்களுக்கு
  • 6:08 - 6:10
    இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே
  • 6:10 - 6:11
    அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே
  • 6:11 - 6:13
    அதுவே சிறந்த வழி
  • 6:13 - 6:17
    காலரா பரவுவதைத் தடுக்க
  • 6:17 - 6:19
    நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம்
  • 6:19 - 6:21
    மிகவும் சக்தி வாய்ந்தது
  • 6:21 - 6:22
    சில சமயங்களில் அதிக சக்தியுடையது
  • 6:22 - 6:26
    அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட
  • 6:26 - 6:27
    அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது
  • 6:27 - 6:31
    முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க
  • 6:31 - 6:33
    மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க
  • 6:33 - 6:35
    காலராவை, தற்பொழுது ஈபோலாவை
  • 6:35 - 6:37
    பல முக்கிய விஷயங்கள் இருப்பதால்
  • 6:37 - 6:40
    நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை
  • 6:40 - 6:42
    இதை எண்ணிப் பார்த்தால்
  • 6:42 - 6:44
    என்ன தேவையென்று சிந்தித்தால்
  • 6:44 - 6:46
    கைகழுவுவதை தினப் பழக்கமாக்க
  • 6:46 - 6:50
    தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது
  • 6:50 - 6:53
    இந்த நடத்தையை மேம்படுத்த.
  • 6:53 - 6:58
    சுருக்கமாகச் சொன்னால் ,
  • 6:58 - 7:00
    சோப் நிறுவனங்களின் உதவி தேவை
  • 7:00 - 7:03
    சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க
  • 7:03 - 7:05
    நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்
  • 7:05 - 7:08
    யூ எஸ் எய்ட்ஸ் ,
  • 7:08 - 7:10
    உலக பொது + தனியார் துறை கூட்டு
  • 7:10 - 7:12
    லண்டன் சுகாதாரப் பள்ளி
  • 7:12 - 7:14
    ப்ளான் வாடர் எய்ட்
  • 7:14 - 7:15
    அனைவரும் நம்புகிறோம்
  • 7:15 - 7:19
    வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை
  • 7:19 - 7:21
    பொதுத் துறைக்கு வெற்றி
  • 7:21 - 7:24
    அவர்கள் இலக்கை அடைய முடிவதால்
  • 7:24 - 7:26
    தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும்
  • 7:26 - 7:28
    புது தலைமுறையை உருவாக்குவதால்
  • 7:29 - 7:32
    மிக முக்கியமாக
  • 7:32 - 7:34
    பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி
  • 7:34 - 7:36
    அக்டோபர் 15ம் தேதியன்று
  • 7:36 - 7:39
    உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம்
  • 7:39 - 7:40
    பள்ளிகள்,சமூகம்
  • 7:40 - 7:42
    பொது சுகாதாரத் துறை நண்பர்கள்
  • 7:42 - 7:45
    தனியார் துறை நண்பர்கள் .
  • 7:45 - 7:47
    நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள்
  • 7:47 - 7:49
    கை கழுவும் தினத்தைக் கொண்டாட
  • 7:49 - 7:51
    உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை
  • 7:51 - 7:53
    இங்கு என்ன தேவை
  • 7:53 - 7:54
    இங்கு தனியார் துறை
  • 7:54 - 7:57
    பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம்
  • 7:57 - 8:01
    மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால்
  • 8:01 - 8:03
    இந்தச் செய்தியை பரப்புவதற்கு
  • 8:03 - 8:06
    குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு
  • 8:06 - 8:09
    சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம்
  • 8:09 - 8:11
    சோப்பால் கை கழுவும் செய்தியை
  • 8:11 - 8:13
    மக்களிடம் பரப்புவதற்காக
  • 8:13 - 8:15
    அவர்களுக்கு புரியும் வகையில்
  • 8:15 - 8:17
    30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள்
  • 8:17 - 8:19
    விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன
  • 8:19 - 8:21
    5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு
  • 8:21 - 8:25
    அவைகளைப் பாருங்கள்
  • 8:25 - 8:26
    நான் மாலியிலிருந்து வருகிறேன்
  • 8:26 - 8:29
    மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று
  • 8:29 - 8:32
    நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும்
  • 8:32 - 8:34
    சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம்.
  • 8:34 - 8:37
    நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில்
  • 8:37 - 8:39
    பிரபல பொது சுகாதாரப் பள்ளியில்
  • 8:39 - 8:42
    ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற
  • 8:42 - 8:44
    என் நாட்டின் ஒரே பெண்மணி நான்
  • 8:44 - 8:48
    சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம்
  • 8:48 - 8:49
    பெற்ற ஒரே பெண்மணி
  • 8:49 - 8:53
    கை தட்டல்
  • 8:56 - 8:58
    9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன்
  • 8:58 - 9:01
    பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன்
  • 9:01 - 9:05
    பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை
  • 9:05 - 9:08
    விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த
  • 9:08 - 9:10
    அது தான் சோப்
  • 9:10 - 9:12
    இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய
  • 9:12 - 9:14
    சோப்பினால் கைகழுவும் திட்டத்தை
  • 9:14 - 9:16
    எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும்
  • 9:16 - 9:20
    183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம்
  • 9:20 - 9:23
    16 நாடுகளில்
  • 9:23 - 9:25
    எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம்
  • 9:25 - 9:29
    2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப
  • 9:29 - 9:31
    கடந்த நான்கு ஆண்டுகளில்
  • 9:31 - 9:33
    வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது
  • 9:33 - 9:35
    குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப்
  • 9:35 - 9:40
    அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும்
  • 9:40 - 9:42
    சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம்
  • 9:42 - 9:44
    வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும்
  • 9:44 - 9:48
    எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை.
  • 9:48 - 9:50
    ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான்
  • 9:50 - 9:52
    எங்களின் சேவை பெருகுகிறது
  • 9:52 - 9:55
    அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல்
  • 9:55 - 9:59
    எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது
  • 9:59 - 10:01
    சென்ற வாரத்தில் நானும் என் குழுவும்
  • 10:01 - 10:04
    பல தாய்மார்களைச் சந்தித்தோம் .
  • 10:04 - 10:07
    அவர்கள் அனைவரும்
  • 10:07 - 10:09
    குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள்
  • 10:09 - 10:12
    நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது
  • 10:12 - 10:15
    இதை விட பெரிய துக்கத்தை, வலியை
  • 10:15 - 10:18
    இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள்
  • 10:18 - 10:20
    மிக அழகான புன்னகை இவளுக்கு
  • 10:20 - 10:22
    இந்தப் புன்னகை வந்தது ஏன்?
  • 10:22 - 10:24
    வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால்
  • 10:24 - 10:28
    இவள் மகன் மியோ இரண்டாமவன்
  • 10:28 - 10:30
    அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள்
  • 10:30 - 10:32
    மரணமடைந்தாள் மூன்று வாரத்தில்
  • 10:32 - 10:34
    எங்களுக்குத் தெரியும் மரணமடையும்
  • 10:34 - 10:36
    பெரும்பான்மையான குழந்தைகள்
  • 10:36 - 10:38
    பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள்.
  • 10:38 - 10:41
    நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால்
  • 10:41 - 10:43
    பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும்
  • 10:43 - 10:45
    குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை
  • 10:45 - 10:47
    பயன்படுத்தினால் , நாம்
  • 10:47 - 10:49
    சிசு மரணங்களை குறைக்கலாம்
  • 10:49 - 10:51
    அது தான் என்ன ஊக்குவிக்கிறது
  • 10:51 - 10:53
    இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர
  • 10:53 - 10:55
    என்னால் அவளுக்கு உதவ முடியும்
  • 10:55 - 10:57
    அவளுக்கு தேவையானதைக் கொடுத்து.
  • 10:57 - 10:59
    அதனால் அவள் செய்யமுடியும்
  • 10:59 - 11:01
    உலகத்திலேயே மகத்தான பணியை
  • 11:01 - 11:03
    பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை
  • 11:03 - 11:05
    அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது
  • 11:05 - 11:07
    ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும்
  • 11:07 - 11:10
    சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள்
  • 11:10 - 11:13
    பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு
  • 11:13 - 11:16
    எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன்
  • 11:16 - 11:19
    சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க.
  • 11:19 - 11:20
    மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக
  • 11:20 - 11:23
    அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ.
  • 11:23 - 11:24
    நன்றி
Title:
கை கழுவுவதின் அபார சக்தி
Speaker:
மிரியம் சிட்பே
Description:

மிரியம் சிட்பே சிறு குழந்தைகளின் வியாதிகளுக்கு எதிராகப் போர்கள் நடத்தும் வீராங்கனை.அவள் இதற்காகத் தேர்ந்தெடுத்த ஆயுதம்?ஒரு சோப்புக் கட்டி. குறைந்த செலவில் வியாதிகளிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பதற்கு சோப்பினால் கைகழுவுவதைக் காட்டிலும் சிறந்த உத்தி இல்லை. அது நிமோனியா, பேதி, காலரா மேலும் அவைகளை விட மோசமான வியாதிகள் பலவற்றின் அபாயங்களை குறைக்கிறது. பொது சுகாதார நிபுணரான சிட்பே, சுத்தமான கைகளைப் பிரபலப்படுத்துவதற்காக, பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து பணியாற்றவும் மேலும் உள்ளூர் நிரந்தர முயற்சிகள் தேவையென்றும் சிறப்பாக வாதாடுகிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
11:41

Tamil subtitles

Revisions