32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை 0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். தசம எண்களை பெருக்கும் பொழுது, அவற்றை முழு எண்களை பெருக்குவதைப் போலவே மிகச் சரியாக அதே வழியில் பெருக்கி, அதன் பிறகு நீங்கள் பெருக்கும் இரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு பின்னே உள்ள இடங்களை எண்ணுங்கள், உங்களுடைய பெருக்கல் பலனில் அத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். இந்த இரண்டு எண்களையும் நாம் பெருக்குவோம். 32.12 முறை 0.5 உள்ளது. அவற்றை எழுதும்பொழுது, அவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு தள்ளவும். நாம் தசமப்புள்ளியை அநேகமாக புறக்கணிக்கலாம். இப்பொழுது, தசம எண்ணை அதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும், ஆனால் இது 3,212 முறை 5 என நீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம், அதன் பின்னர் ஒரு வினாடியில் தசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம். எனவே நாம் தொடங்கலாம். நாம் 5 முறை 3,212ஐ பெருக்கினால், 5 முறை 2 என்பது 10 என நாம் கூறலாம். 1ஐ மறுதொகுப்பு செய்யவும். 5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6. 5 முறை 2 என்பது 10. 1ஐ மறுதொகுப்பு செய்யவும். அதன் பின் இறுதியாக, 5 முறை 3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16. அதற்கு பின் வேறு எந்த இடமும் இல்லை. இதையே நாம் 05ஆக செய்தால், மொத்தத்தையும் 0 முறை பெருக்க மாட்டோம். நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும். எனவே 5 முறை 3,212 நமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது. ஆனால் இப்பொழுது நாம் தசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம். நாம் பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு பின் உள்ள மொத்த இடைவெளி அல்லது இடத்தின் எண்ணிக்கையை எண்ண வேண்டும். எனவே நாம் இப்பொழுது பெருக்கும் இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று இடைவெளிகள் அல்லது மூன்று எண்கள் உள்ளன. எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு தேவைப்படுகின்றன. எனவே ஒன்று, இரண்டு, மூன்று, அந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம். 32.12 முறை 0.5 என்பது 16.060. மேலும் இந்த பின்தொடரும் பூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம், ஏனென்றால் அது உண்மையில் எந்த தகவலையும் சேர்ப்பதில்லை. எனவே இதனை நாம் 16.06 என்றே எழுதலாம். நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை உறுதி செய்வது. உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண் உள்ளது, மற்றும் அதனை நாம் 0.5ஆல் பெருக்குகிறோம். நினைவில் கொள்ளவும், 0.5 என்பது 10ன் மேல் 5ஐ போன்றதாகவும், ½ போன்றதாகவும் உள்ள விஷயம். எனவே நாம் உண்மையில் 32.12ஐ ½ முறை பெருக்குகிறோம். 32.12ன் ஒரு பாதி என்ன என்பதை கண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம். மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன் பாதி 0.06, எனவே இது முழுமையான அர்த்தமுள்ளது.