--- 654.213 என்பதில் 3-ன் இட மதிப்பு என்ன? அதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம். அதைச் செய்வதற்கு, நான் அந்த எண்ணை மீண்டும் எழுதுகிறேன், மேலும் ஒவ்வொரு இலக்கத்தையும் வெவ்வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். எனவே, நம்மிடம் 654 புள்ளி – இங்கு பதின்மப்புள்ளி இருக்கின்றது -- 213 இப்பொழுது, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் என்ன இருக்கிறது என்று, நாம் நன்கு புரிந்துகொண்டோம். இதற்கு வலது பக்கத்தில் இருப்பது – நான் அதை நடுநிலை வண்ணத்தில் எழுதுகிறேன் -- இது நூறின் இடம், அல்லது இதை நாம் 10-ன் இரண்டாவது அடுக்கு எனப் பார்க்க முடியும். இதை நான் சற்று பெரிதாக எழுதுகிறேன். இதற்கு வலது பக்கத்தில் இருப்பது நூறின் இடம், அல்லது 10-ன் இரண்டாவது அடுக்கு அதாவது நூறு என்பதைக் குறிப்பதாகும். இதற்கு வலது பக்கத்தில் பத்தின் இடம் உள்ளது, இது 10-ன் ஒன்றாவது அடுக்கு. இதற்கு வலது பக்கத்தில் இருப்பது ஒன்றின் இடம், 10-ன் அடுக்கு பூஜ்யம் என்பதைக் குறிக்கின்றது. பின்பு, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் நீங்கள் ஒரு இடம் சென்றால் இது பத்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது. இது பத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது, அல்லது நாம் இதை 10-ன் அடுக்கு எதிர்ம ஒன்று எனப் பார்க்கலாம். பின்பு, இந்த கருஞ்சிவப்புக்கு சென்றால், நீங்கள் இரண்டு இடங்கள் வலதுபக்கம் சென்றால், இது நூறில் ஒன்று, அல்லது 10-ன் அடுக்கு எதிர்ம இரண்டு என்பதைக் குறிக்கிறது. அதன் பின்பு இறுதியில், இந்த 3 என்பது ஆயிரத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது. இது ஆயிரத்தில் ஒன்று, அல்லது 1-ன் அடுக்கு எதிர்ம மூன்று என்பதைக் குறிக்கின்றது. இப்பொழுது, இந்தக் கேள்விக்கு விடை காணலாம், 654.213-ல் 3-ன் இட மதிப்பு என்ன? இதன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று ஆகும். அது இந்த கேள்விக்கு பதிலளிக்கும். ஆனால், நாம் புரிந்துகொள்வதற்கு, இந்த எண்ணை மீண்டும் எழுதப் போகின்றேன். நாம் இந்த எண்ணை 600 என எழுதலாம். நம்மிடம் 6 நூறுகள் + 5 பத்துகள் உள்ளது, அல்லது 50+4 ஒன்றுகள் + 2/10 + 1/100 + 3/1,000. அல்லது, இடமதிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள, நான் இதை எழுதுகிறேன், நாம் இந்த எண்ணை 6 x 100, கூட்டல் 5 x10, கூட்டல் 4 x 1 – நான் இதை தவறான வண்ணத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன் -- கூட்டல் 2 x 1/10, கூட்டல் 1 x 1/100, பிறகு கடைசியாக, கூட்டல் 3 x 1/1000. எனவே இதுபோன்று எழுதும்போது, இடமதிப்பு என்றால் என்ன என்பது நன்கு விளக்கும். தசமப் புள்ளிக்கு மூன்று இலக்கங்கள் இடது பக்கத்தில் இருக்கும் 6, நூறின் இடம், எனவே அது 6 நூறுகள் என்பதைக் குறிக்கிறது. இது 5 பத்துகள் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அது பத்தின் இடத்தில் உள்ளது. இது 4 ஒன்றுகள் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஆயிரத்தின் இடத்துக்குச் செல்கிறீர்கள், இந்த 3, உண்மையில் மூன்று ஆயிரத்தைக் குறிப்பிடுகிறது. --