1 00:00:03,836 --> 00:00:07,140 காட்சிப்படுத்தல் எனது வேலையின் அடிப்படை. 2 00:00:07,678 --> 00:00:10,449 நான் உலக சுகாதாரத்தை போதிக்கிறேன். 3 00:00:10,548 --> 00:00:13,231 தரவுகள் மட்டும் போதாது என்பதை நான் அறிவேன். 4 00:00:13,231 --> 00:00:17,920 மக்கள் விரும்பும் வண்ணமும், புரிந்துகொள்ளும்படியும், தரவுகளை நான் காட்டவேண்டும். 5 00:00:17,920 --> 00:00:22,303 எனவே, நான் ஒரு புது முறையை கையாளவிருக்கிறேன். 6 00:00:22,303 --> 00:00:25,182 தரவுகளுக்கு நிகழிடத்தில் அசைவூட்டம் தருகிறேன், 7 00:00:25,182 --> 00:00:28,526 என் குழு தரும் சில தொழில்நுட்ப உதவிகளுடன். 8 00:00:29,311 --> 00:00:33,375 முதல் அச்சு சுகாதாரத்தை பிரதிநிதிக்கிறது. 9 00:00:33,375 --> 00:00:38,640 மனிதனின் ஆயுட்காலம் 25 முதல் 75 ஆண்டுகள் வரை. 10 00:00:38,640 --> 00:00:41,177 கீழ் அச்சு பொருளியலைக் காட்டுகிறது. 11 00:00:41,177 --> 00:00:46,550 தனிநபர் வருமானம்: 400, 4000 மற்றும் 40,000 டாலர்கள். 12 00:00:46,550 --> 00:00:50,334 எனவே, கீழே ஏழைகளும் நோயாளிகளும் இருக்கின்றனர். 13 00:00:50,334 --> 00:00:51,904 மேலே, பணக்காரர்களும், உடல்நலமுடையவர்களும். 14 00:00:53,473 --> 00:00:58,520 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த உலகை காட்டுகிறேன். 15 00:00:58,520 --> 00:01:00,291 1810-ல். 16 00:01:00,291 --> 00:01:01,962 நாடுகள்: 17 00:01:01,962 --> 00:01:08,099 ஐரோப்பா பழுப்பு, ஆசியா சிவப்பு, மத்திய கிழக்கு பச்சை, ஆப்பிரிக்கா - சஹாராவின் தெற்கு நீலம், 18 00:01:08,099 --> 00:01:09,622 அமெரிக்கா மஞ்சள். 19 00:01:09,622 --> 00:01:13,300 நாடுகளை காட்டும் குமிழிகளின் அளவு அந்நாட்டின் இனத்தொகையை காட்டுகிறது. 20 00:01:13,300 --> 00:01:17,375 1810-ல், கீழே மிகவும் நெருக்கமாக உள்ளது. 21 00:01:17,375 --> 00:01:19,409 எல்லா நாடுகளும் நோயுற்றும், ஏழையாகவும் இருக்கின்றன. 22 00:01:19,409 --> 00:01:23,155 ஆயுட்காலம் 40 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. 23 00:01:23,155 --> 00:01:26,957 பிரிட்டிஷ் கூட்டரசும் நெதர்லாந்தும் மட்டும் கொஞ்சம் நன்றாய் இருக்கின்றன, 24 00:01:26,957 --> 00:01:28,553 ஆனாலும், அதிகம் சொல்லும் அளவில் இல்லை. 25 00:01:28,553 --> 00:01:30,201 இன்றைய உலகு. 26 00:01:31,970 --> 00:01:36,603 தொழிற்புரட்சி, ஐரோப்பிய மற்றும் சில நாடுகளை, 27 00:01:36,603 --> 00:01:38,578 ஏனைய நாடுகளிலிருந்து நகர்த்துகிறது. 28 00:01:38,578 --> 00:01:41,433 ஆனால், காலனியாதிக்கத்திற்கு உள்ளான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் 29 00:01:41,433 --> 00:01:43,610 இங்கேயே மாட்டிக் கொள்கின்றன. 30 00:01:43,610 --> 00:01:47,421 மேற்கத்திய நாடுகள் மேன்மேலும் சுகாதாரமுடைய நாடுகளாக உருவெடுக்கின்றன. 31 00:01:47,467 --> 00:01:51,313 இப்பொழுது, 32 00:01:51,313 --> 00:01:52,936 முதல் உலகப்போர் மற்றும் 33 00:01:52,936 --> 00:01:57,672 இஸ்பானிய இன்ஃபுளுவென்சா விளைவுகள். பேரழிவு. 34 00:01:57,672 --> 00:02:02,403 1920-களையும் 1930-களையும் பார்ப்போம். 35 00:02:02,403 --> 00:02:04,042 பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்படினும், 36 00:02:04,119 --> 00:02:05,880 மேற்கத்திய நாடுகள் 37 00:02:05,880 --> 00:02:07,426 பொருளியலையும், சுகாதாரத்தையும் நோக்கி நகர்கின்றன. 38 00:02:07,426 --> 00:02:09,540 ஜப்பான் மற்றும் சில நாடுகள் மேற்கத்திய நாடுகளை தொடர முற்படுகின்றன. 39 00:02:09,540 --> 00:02:11,440 இருப்பினும், பெரும்பாலான நாடுகள் கீழையே தங்கிவிடுகின்றன. 40 00:02:11,440 --> 00:02:15,117 இரண்டாம் உலக போரின் துயரங்களுக்குப் பின், 41 00:02:15,117 --> 00:02:18,512 1948-ன் உலகை பார்ப்போம். 42 00:02:18,512 --> 00:02:22,926 1948 ஒரு நல்ல ஆண்டு: போர் முடிவுற்று இருக்கிறது, 43 00:02:22,926 --> 00:02:26,098 ஸ்வீடன் குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெற்றிபெருகிறது, 44 00:02:26,098 --> 00:02:27,675 நானும் பிறந்த ஆண்டு. 45 00:02:27,675 --> 00:02:30,763 ஆனால், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் 46 00:02:30,763 --> 00:02:32,463 முன்பைவிட அதிகமாக உள்ளன. 47 00:02:32,463 --> 00:02:36,525 அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, ஜப்பான் அதனை தொடர்கிறது. 48 00:02:36,555 --> 00:02:38,691 பிரேசில் பின்னால் இருக்கிறது, 49 00:02:38,691 --> 00:02:42,742 ஈரானும் பெட்ரோலிய உற்பத்தியால் பொருளியல் ஈட்டுகிறது; ஆனால், குறிகிய ஆயுட்காலம் கொண்டுள்ளது. 50 00:02:42,742 --> 00:02:45,559 ஆசிய பெருநாடுகள்: 51 00:02:45,559 --> 00:02:47,943 சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இந்தோனேசியா, 52 00:02:47,943 --> 00:02:50,343 இன்னும் ஏழையாகவும் நோயுற்றும் இருக்கின்றன. 53 00:02:50,343 --> 00:02:52,371 ஆனால், என்ன நடக்க இருக்கின்றது என பாருங்கள். 54 00:02:52,371 --> 00:02:53,962 இதோ! 55 00:02:53,962 --> 00:02:57,384 எனது ஆயுட்காலத்தில், காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைகின்றன. 56 00:02:57,384 --> 00:03:00,188 அவற்றின் சுகாதாரம் அதிகரிக்கின்றது. 57 00:03:00,188 --> 00:03:00,950 தொடரும் சுகாதார வளர்ச்சி, 58 00:03:00,950 --> 00:03:02,403 தொடரும் சுகாதார வளர்ச்சி, 59 00:03:02,403 --> 00:03:06,131 1970-ல், ஆசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் 60 00:03:06,131 --> 00:03:08,562 மேற்கத்திய நாடுகளின் நிலையை எட்டிப்பிடிக்க ஆரம்பிக்கின்றன. 61 00:03:08,562 --> 00:03:10,715 அவை வளரும் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. 62 00:03:10,715 --> 00:03:12,415 சில ஆப்பிரிக்க நாடுகளும் பின்தொடர்கின்றன. 63 00:03:12,415 --> 00:03:14,454 சில ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப்போரில் அகப்பட்டுகொள்கின்றன. 64 00:03:14,454 --> 00:03:15,954 மற்றவை எச்.ஐ.வி-யிடம். 65 00:03:15,954 --> 00:03:18,454 இன்றைய உலகை 66 00:03:18,454 --> 00:03:21,598 நவீன புள்ளிவிவரங்களுடன் காண்போம். 67 00:03:22,859 --> 00:03:25,440 அதிகமானோர் நடுவில் வாழ்கின்றனர். 68 00:03:25,440 --> 00:03:28,068 அதே வேளையில், பெரிய வித்தியாசங்களும் உள்ளன. 69 00:03:28,068 --> 00:03:30,237 நல்ல நிலையிலான நாடுகளுக்கும், மோசமான நிலையில் உள்ள நாடுகளுக்கும் இடையில். 70 00:03:30,237 --> 00:03:34,098 நாடுகளுக்குள் சமநிலை இல்லை. 71 00:03:34,098 --> 00:03:36,560 இந்த குமிழிகள் நாட்டின் சராசரியை காட்டுகின்றன. 72 00:03:36,560 --> 00:03:38,120 ஆனால், என்னால் இதனை பிரிக்க முடியும். 73 00:03:38,120 --> 00:03:41,160 சீனாவை எடுத்துகொள்வோம். மாநிலங்களாக பிரிக்க முடியும். 74 00:03:41,160 --> 00:03:44,052 இது ஷங்ஹாய். 75 00:03:44,052 --> 00:03:47,680 இதற்கும் இத்தாலிக்கும் சமமான பொருளியலும் சுகாதாரமும் இருக்கின்றன. 76 00:03:47,680 --> 00:03:51,077 இது ஏழை உள்நாட்டு மாநிலமான குய்சொ, 77 00:03:51,077 --> 00:03:52,403 இது பாகிஸ்தானைப் போன்றது. 78 00:03:52,403 --> 00:03:54,912 மேலும் பிரிக்கையில் 79 00:03:54,912 --> 00:03:57,800 நாட்டுபுரங்கள் ஆப்பிரிக்காவின் கானாவை போன்றன. 80 00:04:01,100 --> 00:04:03,462 இத்தகைய பெரிய வேறுபாடுகளுக்கு இடையில், 81 00:04:05,133 --> 00:04:06,805 இருநூறு ஆண்டுகளுக்காண குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் கண்டோம். 82 00:04:06,805 --> 00:04:08,741 நீண்ட வரலாற்றுக்குரிய மேற்கத்திய-கிழக்கத்திய 83 00:04:08,741 --> 00:04:10,449 நாடுகளுக்கிடையிலான இடைவெளி இப்பொழுது குன்றுகிறது. 84 00:04:10,449 --> 00:04:15,216 நாம் புதிதாய் ஒருங்கிணையும் உலகை காண்கிறோம். 85 00:04:15,216 --> 00:04:17,609 நான் தெளிவான எதிர்காலத்தை காண்கிறேன். 86 00:04:17,609 --> 00:04:20,496 அது உதவி, வணிகம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் அமைதியால் ஆனது. 87 00:04:20,496 --> 00:04:23,242 அனைவரும் சுகாதாரமும் பொருளியலும் கொண்ட 88 00:04:24,381 --> 00:04:25,520 இந்த மூலையை அடைய முடியும். 89 00:04:27,689 --> 00:04:30,683 நீங்கள் கடந்த சில நிமிடங்களில் கண்டது 90 00:04:30,714 --> 00:04:33,602 இருநூறு நாடுகளின் 91 00:04:33,602 --> 00:04:36,160 இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான கதை. 92 00:04:36,160 --> 00:04:40,200 120,000 எண்களை செயல்படுத்துவதன் மூலம் அமைந்தது. 93 00:04:40,250 --> 00:04:43,000 நன்றாய் அமைந்தது தானே?