a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க. a + 5 = 54 இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது. இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும். இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம். ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும். பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது இந்த a தனியாக இடது புறம் இருக்க வேண்டும். இதனை தனிமை படுத்த வேண்டும். இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம். இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும். 5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும். எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54 இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும். எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும். a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும், இது a கூட்டல் 0 என்றாகும். ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம். இவை நீங்கி விடும். a கூட்டல் 0 என்பது a தான். பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான். நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49 இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம் a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 49 கூட்டல் 49 + 5 = 54 இது சரியா என்று உறுதி செய்கிறோம். 49 + 5 என்பது 54 தான். இது சரியாக உள்ளது.