உங்கள் நண்பர்கள் உதவியுடன் உங்கள் YouTube வீடியோக்களை மொழிபெயர்த்து உலகளவில் பார்வையாளர்களை வளருங்கள் YouTube இன் "மொழிபெயர்ப்புக் கோரிக்கை" அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம். தொடங்குவதற்கு, உங்கள் வீடியோ மேலாண்மைப் பக்கத்திற்குச் சென்று ஒரு துணைத் தலைப்புகள் கொண்ட வீடியோவினைக் கண்டறிந்து, "திருத்து" பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அதில் "தலைப்புகள்" என்ற உருப்படியைத் தேர்வு செய்யுங்கள். "மொழிபெயர்ப்புக் கோரு" (Request translation) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் மொழிபெயர்ப்பு உதவி பெற விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம். "அடுத்து" பொத்தானைக் கிளிக் செய்து தொடருங்கள். இந்தப் பக்கத்தில், ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், "பகிர்" என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது இந்த மொழிபெயர்ப்பினை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி மொழிபெயர்க்கக் கோரலாம். நீங்கள் ஒரு நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பின் அழைப்பிதழ்களை அனுப்பவும். உங்களுக்கு உதவி செய்ய அழைத்து உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும். மின்னஞ்சலில் ஒரு இணைப்பு உங்கள் கோப்பிற்கு வழிகாட்டும். இப்போது உங்கள் நண்பர் Google மொழியாக்கம் மூலம் வந்த முதற்பிரதியை ஆய்வு செய்து திருத்தி மேம்படுத்த முடியும். அவர்கள் மொழிபெயர்த்து முடித்தவுடன், அவர்கள் "YouTubeக்கு வெளியிடு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம். உங்கள் நண்பர் முடித்துவிட்டார் என்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இணைப்பை கிளிக் செய்து புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பினைப் பார்வையிடலாம். புதிதாக வந்துள்ள மொழியினைக் கிளிக் செய்யவதன் மூலம், நீங்கள் உங்கள் நண்பரின் திருத்தங்களைப் பார்வையிடலாம். பார்வையிட்டு முடித்ததும், "முடிந்தது" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். இப்போது ஒப்புதல் தர, பொத்தானைக் கிளிக் செய்யவும். அவ்வளவுதான்! இப்போது உங்கள் வீடியோ உலகளாவிய பார்வையாளர்களுக்குத் தயாராகிவிட்டது. இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, YouTube உதவி மையத்தைப் பார்க்கவும்.