சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான வடிவமைப்பு,பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை. ஆனால்,பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது. ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் அக்கருத்துக்களை சரிசெய்வதாகும். இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு முறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சீரற்ற செயல்முறைகளின் விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது. அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆச்சர்யமாக வேலை செய்கிறது. பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது. சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது. உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன.இரண்டு கண்கள் உள்ளன. ஆகவே,உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது. வண்ணங்களைப் பார்க்கிறோம்.இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் சரியாக்கிக் கொள்கிறோம்.ஆகவே,மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற செயல்முறையில் நடந்திருக்கும்? என்ற வாதம் வருகிறது. இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை. இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன்,பரிணாம வளர்ச்சி என்பது இயற்கைத் தேர்வுடன் வருவது.பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்கும். ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது. இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை, இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் பார்க்கும்பொழுது தெரியும். உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை,மாறுபாடுகள் உள்ளன. நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு கிட்டப்பார்வை உள்ளது,சிலருக்கு தூரப்பார்வை உள்ளது. நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது.காலமாக ஆக அது அழிந்துவிடும். மனிதர்களுக்கு கண்புரை வருகிறது, அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது. இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை. மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன். உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம். மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது. கடலுக்கடியில் மீன்கள் உள்ளன.அவைகளுக்கு கண்கள் உள்ளன. அவைகள் ஒளி உணரிகள்.மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி கண்கள் உண்டு. அவைகளுக்கு அவை பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம். வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் பொருள் உள்ளது,அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது. அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் உயர்வாக உள்ளன.பகல்பொழுதுகளிலும் மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது. சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை. ஆகவே,சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது. நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன். நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். உண்மையில் மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை. ஆனால்,என் முழு கருத்தும் என்னவென்றால் நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் கூறப்போவதில்லை. மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நான் எப்பொழுதும் நினைப்பது,மதம் மற்றும் அறிவியல் அல்லது அனைத்தும். வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். நமக்கு இந்தப் புரிதல் வேண்டும். நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது. அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும்.. இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன். உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன். மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல.என்னவென்றால் பரிணாமம் , சீரற்ற செயல்முறை , கடவுள் இல்லை,இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல. இல்லை,இது என்னுடைய கருத்தும் இல்லை. இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன். கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை. அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல. உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல. ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை. நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. நம் கவனத்தை வைரஸ்,புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும். ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில்,ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது, கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள். டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும். ATG, C, A, போன்ற பல நூறுகோடிக் கணக்கானவற்றைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக வடிவமைப்பு என்று நாம் கூறும்பொழுது வரிசையின் வடிவமைப்பைப் பற்றித்தான் பேசுகிறோம். வரிசை என்று கூறும்பொழுது நமக்கு அதைப்பற்றி நிறையத் தெரியும். ஆரம்பகாலத்தில் வைரஸ்களில் இருந்துதான் நிறைய ஆரம்பித்தன. நான் இங்கு செய்யப்போகிற விவாதம் என்னவென்றால் என் மனத்திற்காகவாவது அனைத்து சக்தி வாய்ந்த அந்தக் கடவுளை கவுரவப்படுத்துவது, அமைப்பு என்று கூறும்பொழுது நேர்த்தியான அடிப்படை யோசனைகளான இயற்கைத் தேர்வு,மற்றும் நம் DNA வில் உண்டாகும் வேறுபாடுகள் அவற்றை சடுதி மாற்றங்கள் என்கிறோம். இயற்பியல்,மற்றும் வேதியியலில் இந்த விதிகள் வரும்.எளிமையான அந்த நேர்த்தியான அடிப்படைக் கருத்துக்களில் இருந்துதான் சிக்கலானவைகள் உருவாகின்றன. இந்தக் கருத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி பேசப்படுகிறது இந்தப் பிரபஞ்சத்துள் இந்தப் பரந்த உலகம் அதைச் சுற்றியுள்ள சூழல் அந்த அடிப்படையான ,எளிமையான,அழகான அந்தக் கருத்துக்களில் இருந்துதான் உண்மையில் இந்தச் சிக்கலான வடிவமைப்பு வருகிறது. உண்மையில் பிரமிப்பையும் எழுச்சியும் உண்டாக்கக் கூடியதாக உள்ளது. பரிணாமவளர்ச்சி என்று கூறும்பொழுது என் மனதில் தோன்றுபவை இவை. என்னுடைய மனதில், நான் பொறியாளாராக இருந்தாலும் இது உயர்ந்த வடிவமைப்பாக உள்ளது. இது பரந்த வடிவமைப்பைப் பற்றிக் கூறுகிறது. ஆகையால் ,இந்தக் காணொளி முழுவதும்,வாதம் அனைத்தும் ஒருவேளை கடவுளை நம்புவராக இருந்தால் , அதற்காக நான் இங்கு வாதம் புரியப்போவதில்லை. கடவுள் என்று கூறும்பொழுது அதில் அழகு,நேர்த்தி,அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன. இயற்பியல் விதிகள்,வேதியியல் சட்டங்கள்,இயற்கைத் தேர்வுகள் பற்றி இவைகள் நான் கடந்த காணொளியில் இயற்கைத் தேர்வுகள் பற்றி விளக்கும்பொழுது கூறியுள்ளேன். அது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். இது மிகவும் பரந்த வடிவமைப்பு. இது வடிவமைப்பாளரின் கலை இதில் பலவற்றையும் ஒன்றாக்க முடியாது. பரந்த,அளப்பிடற்கரிய இந்த கலைபற்றியது என்னவென்றால் அதன் தகவமைப்பு. சூழ்நிலை தகைவு ஏதேனும் ஏற்பட்டால் மற்ற வேறுபாடுகள் அவ்வப்பொழுது அழியாமல் தப்பித்துக் கொள்கின்றன. ஆகவே,அந்தப் பூரணத்துவம் அப்படியே இருந்துவிடுகிறது. ஆனால்,எந்தவொரு வடிவமைப்பும் இந்த அளவுவரை அதிகம் செல்லும் என்றில்லை. சிறந்ததாகும் என்று நான் கூற விரும்பவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மாற்றங்கள் மிகவும் பொருந்தி வருகிறது. என்னைப் பொருத்தவரை அவை மிகவும் நல்ல வடிவமைப்பு. அதைப்பற்றியவரை நான் மிகவும் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இந்த வடிவமைப்பில் இருந்து நம் தரத்தை உயர்த்தக்கூடிய ஒரு கருத்தை எதிர்பார்க்கிறோம். விஞ்ஞான மற்றும் கணித உலகில் இதற்கான கருத்துகள் இருக்கலாம். இதற்குச் சிறந்த உதாரணம் பகுவியல். நீங்கள் மாண்டல்ப்ராட் தொகுதி பற்றி அறிந்திருப்பீர்கள். மிகவும் பிரபலமான பகுவியல் தொகுதி ஆகும். மிகமிகச் சிக்கலானவை. உண்மையில் நாம் அந்த மாண்டல்ப்ராட் தொகுதியை எந்தப் புள்ளியிலும் பெரிதுபடுத்திக் கொள்ளலாம்.அதைப் பெரிது செய்யும்பொழுது மேலும் சிக்கலாகத் தோன்றும்.அதை ஆராய்வதற்கு நிறையவே உள்ளது.ஆராய்ந்துகொண்டே இருக்கலாம். இதல் உள்ள அழகு என்னவென்றால் இவை அவ்வளவும் ஒரே சமன்பாட்டால் கூறப்பட்டிருக்கும். மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் எளிதான சமன்பாடு. அடுத்த z எதற்குச் சமம் என்றால் z ஸ்கொயர் கூட்டல் 1 ஆகிறது. சால்,இதுவரை அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் பரிணாம வளர்ச்சிபற்றியும் கூறிக்கொண்டிருந்தீர்கள். ஏன் திடீரென்று பின்னத்தொகுதியில் நுழைந்தீர்கள்? என நீங்கள் கேட்கலாம். என்னுடைய கருத்து என்னவென்றால் இருவடிவமைப்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஒன்றை எடுத்து அதே போல் வடிவமைக்கிறார். ஒன்றை பழுப்பிலும் ஒன்றை ஊதாவிலும் வேறொன்றை மற்ற வடிவங்களுக்கேற்றாற் போல் வட்டமாகவும் வடிவமைக்கிறார்.நீங்கள் அவரை ஒரு வியத்தகு ஓவியராக எண்ணுகிறீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் 300 வருடங்கள் முன்னால் செல்கிறீர்கள் .அப்படிச் சென்று அவர்களிடம் இதையெல்லாம் காட்டுகிறீர்கள். அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அருமையான வடிவமைப்பு என்று கூறுவார்கள்.ஏனெனில் அது நிறையவே சிக்கலானது.பார்க்கப்போனால் இதை ஒரு எளிய சமன்பாட்டால் விளக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். சிக்கலான தளம்.அதை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். மன்னியுங்கள்,கூட்டல் 1,கூட்டல் c என்பதில்லை. இதை நான் தெளிவாக்குகிறேன். சமன்பாட்டில் கூட்டல் c உள்ளது. ஆகவே,அந்தச் சிக்கல் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும் c க்கான மதிப்பைப் போடவேண்டும் பின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து செய்துகொண்டே போக வேண்டும். பூச்சியம் ஸ்கொயர் கூட்டல் எண் அதாவது அந்தச் சிக்கல் எண் அதற்குச் சமம். மீண்டும் அந்த ஸ்கொயர்எண்ணுடன் அந்தச் சிக்கல் எண்ணைக் கூட்ட வேண்டும். மீண்டும் மீண்டும் இதைச் செய்துகொண்டே போகவேண்டும். அதில் சில எண்கள் முடிவிலிக்குச் செல்லாது. அவைகள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இது மெண்டல் ப்ராட் தொகுதியில் ஒரு பகுதியாகும். இதில் முடிவிலி இல்லாத எண்கள் சமன்பாட்டில் உள்ளன. அது முடிவிலிக்குச் செல்லும் வேகத்திற்கேற்றாற் போல் நீங்கள் அதற்கு வண்ணம் கொடுக்கலாம்.முடிவில்லாத வண்ணம், இது நிறைய அழகான சிக்கலான அமைப்புகளைக் கொடுக்கும். நீங்கள் மிகவும் பரந்த வகையான அமைப்பு என்று கூறும்பொழுது நீங்கள் இதைப்பற்றி எந்தப் பொறியாளரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஏனெனில் இது மிகவும் எளிதானது,நேர்த்தியானதும் கூட ஆனால் இது முடிவில்லாத சிக்கலான ஒன்றை விளக்குகிறது. பார்க்கப்போனால் ஒன்றைமட்டும் இல்லை மெட்டா நிலையில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. உருவாக்கல் என்பதற்கு இதை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். எப்படியோ இது என்னுடைய காணொளி நிகழ்வாகிவிட்டது. இதில் அறிவியலை விட்டு சற்றே விலகிப் போய்விட்டேன் மனோதத்துவ அல்லது பிரமிப்பூட்டும் எழுச்சிநிலையில் சற்றே கவனம் வைத்துவிட்டேன். இந்தச் சிறிய என் கருத்துக்கு நீங்கள் எப்படி ஒத்துப்போவீர்கள் என்பதுதான் என்னுடைய முழு கருத்தும். பரிணாமம்,அந்த சீரற்ற முறை இங்கு கடவுள் இல்லாத உலகைப் பற்றிக் கூறவில்லை. மேலும் நான் ஒரு சார்பாகக் கூறப்போவதும் இல்லை. என்னுடைய மனதில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத்தான் பார்க்கமுடிகிறது.என்னுடைய உரிமையை இப்படி எடுத்துக் கொண்டதற்கு மன்னியுங்கள் இங்கு எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இங்கு என்னுடைய கருத்தை மட்டும்தான் கூறியுள்ளேன். அடுத்த காணொளியில் காண்போம். அடுத்த காணொளியில் காண்போம்.